“நீலம்” தயாரிப்பு நிறுவனத்தின் முந்திய திரைப்படங்களைப் போலவே இப்படமும் சமூக பிரச்சனையை விவாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குனர் பா. ரஞ்சித், தனது “நீலம்” தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய இக்குனர்களை அறிமுகம் செய்து வருகிறார். இதுவரை “நீலம்” தயாரிப்பு நிறுவனம் மூலம் 5 படங்களை தயாரித்துள்ளார். இவர் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தையும் தனது தயாரிப்பு நிறுவன பெயரிலே தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தான் இவர் தயாரிக்கும் 6வது படத்தின் அறிவிப்பு வெளியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குனர் ஜெய் இயக்குகிறார். ரஞ்சித் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” படத்தின் இணை எழுத்தாளரான தமிழ்ப்பிரபா இப்படத்திற்கும் இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் கதைக் களம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு நகரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்வி, திவ்யா துரைசாமி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். “நீலம்” தயாரிப்பு நிறுவனத்தின் முந்திய திரைப்படங்களைப் போலவே இப்படமும் சமூக பிரச்சனையை விவாதிக்கும் எனக் கூறப்படுகிறது.







