நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி உயிரிழப்பு

அரியலூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச்…

அரியலூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கருணாநிதி. இவர் தனது 2-வது மகள் கனிமொழியின் படிப்பு வசதிக்காக துளாரங்குறிச்சியில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

தனது 12ம் வகுப்பு தேர்வில் 93 சதவிகிதம் மதிப்பெண் எடுத்து தேர்வாகியுள்ளார். இந்நிலையில் கனிமொழி கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் தேர்வு எழுதிய பின்னர், மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் மாணவி கனிமொழி இருந்ததாக கூறப்படுகிறது. மாணவி கனிமொழி சோர்வாக இருந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தனுஷ் எனும் மாணவர் ஒருவர் நீட் அச்சம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்போது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.