முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு திரும்பினார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்

மீண்டும் சென்னைக்கு திரும்பினார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்

கோவா சரகத்தில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக 2014-2016 வரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியாற்றியிருந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் வழங்கியது மத்திய தொல்லியல் துறை. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது – கெஜ்ரிவால் அறிவிப்பு

Saravana Kumar

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை

Ezhilarasan

ஹரியானா விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கு

Halley karthi