நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் மே 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
வரும் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு தற்போது தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக வரும் 27-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஹால்டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.