பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இந்திய நாட்டை ஆளும் திறன் கொண்டவர் என அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி புகழாரம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள்
நிறைவடைவதை ஒட்டி அக்கட்சியின் சார்பில் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாமக நிறுவனர் ராமதாஸ்் இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, ஜி.கே. மணி கட்சிக்கும், மக்களுக்கும் நேர்மையான முறையில் சேவையாற்ற கூடியவர் என்றும்
அவர் போல நேர்மையான ஒருவரை தான் பார்த்ததில்லை என்றும் கூறினார்.
எம் ஜி ஆர் மற்றும் கலைஞர் ஆகியோர் ஜி கே மணியை எங்கள் இயக்கத்தில் வந்து
சேருங்கள் என அழைத்துள்ளனர். ஆனால் அவர், எனக்கு ராமதாஸ் தான் முக்கியம் என கூறி பாட்டாளி மக்கள்
கட்சியை தலைமை ஏற்று வருகிறார்.
ஒருவருக்கு வெற்றி வரும் போது, லட்ச கணக்கான மக்கள் அவருடன் இருப்பார்கள்,
ஆனால் சோதனை வரும் போது, அவருடன் உண்மையாக இருப்பவர் யாரோ ஒருவர் தான். அப்படி உண்மையானவரக இருப்பவர் ஜி கே மணி எனக் கூறினார்.
இது பொது விழாவாக இருந்திருந்தால், முதலமைச்சர்
முதல் ஆளுநர் வரை, அனைத்து கட்சி தலைவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு
வந்திருப்பார்கள்.
அந்த அளவிற்கு எங்கள் தியாக செம்மல் ஜி கே மணியை அனைவருக்கும் தெரியும். பொது வாழ்க்கையில் நேர்மை மிக மிக முக்கியம், இன்று கட்சி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மிக மிக நேர்மையாக செயல்பட்டு வருபவர் ஜி கே மணி என்றும் ஜி.கே. மணி போல ஒரு தலைவர் எந்த கட்சிக்கும் கிடைத்திருக்க மாட்டார்கள் என்று புகழ்ந்து பேசினார்.
சட்டமன்றப் பேரவையில் அதிக கேள்விகளை கேட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல்
கொடுக்கக்கூடிய தலைவராக ஜி.கே. மணி இருக்கிறார். ராமதாசுக்கு ஜி.கே. மணி மற்றும் அன்புமணியும் என இரு மகன்கள் என்று கூறி தன் உரையை முடித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய ஜிகே மணி, இந்த 25 ஆண்டுகள் பணியாற்றியது தான் அல்ல, தமிழ் இயக்கியவர், ஊக்குவித்தவர்
ராமதாஸ் என்றார். வன்னியர் சங்கம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை அவர் மனசாட்சியாக இருந்ததாக நினைக்கிறேன்..
இந்த வெள்ளிவிழாவினை குடும்ப விழாவாக பார்கிறேன், தன்னை குடும்பத்தில்
ஒருவராக தான் பார்க்கிறார்கள் அந்த பாச உணர்வு தான் தன்னை இப்படி ஆளாக்கி
இருக்கிறது…
எங்கேயாவது உங்களிடத்தில் கடினமாக பேசி இருந்தால் கூட என்னை மன்னிக்க
வேண்டும், எனக்கு கோவம் வந்தால் கூட அதனையும் எளிமையான முறையில் தான்
காண்பித்துள்ளேன்..
எல்லோரும் ஜாதி கட்சி என பாமக வை சொல்கிறார்கள், ஆனால் இன்று தலித் சமுதாயம் முதல் அனைத்து சமுதாயத்தினரும் ராமதாசை பாராட்டி பேசுகிறார்கள்.
ஒரு தலித் சமூகத்தின் பிணத்தை தோளில் சுமந்து சென்றவர்கள் நாங்கள். ஒருமுறை கடலூரில் ராமதாஸ் நுழைய கூடாது என மாவட்ட ஆசியர் அறிவித்தார், நாங்கள் இரவோடு இரவாக 4 வண்டிகளில் சென்று அவரது அலுவலகம் முன்பு
அமர்ந்து கொண்டோம்.
நாங்கள் கோரிக்கை விடுத்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை, அதன் பிறகு நடந்தது வேறு, அதை சொல்ல கூடாது.
பின் நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள் சென்றேன், மாவட்ட ஆட்சியரை
பார்த்து இன்னும் ஒரு மணி நேரத்தில் அனுமதி தர வேண்டும்
என கேட்டு கொண்டேன்.
உடனே மாவட்ட ஆட்சியர் மேல் இடத்தில் உத்தரவு பெற வேண்டும் என கூறினார், அதன்
பின் ஒரு மணி நேரத்தில் ராமதாஸ் கடலூரில் கூட்டம் நடத்தினார்.
அப்போது 10,000 மேற்பட்ட மக்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்,
ராமதாஸ் மீது மக்களுக்கு அன்பு அதிகம்.
அந்த கூட்டத்தில் ராமதாஸ் கைது செய்யப்பட்டார், இதுபோல பல
இன்னல்களை சந்தித்தார்.
அவர் செல்லாத ஒரே சிறை, பாளையங்கோட்டை சிறை மட்டுமே.
அனைத்திற்கும் உரித்தானவர் ராமதாஸ் தான், என்னை விட நூறு மடங்கு
அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.
அதே சமையம் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரியவர் அன்புமணி,
அவருக்கு இருக்க கூடிய திறமைக்கு அவர் தமிழகத்தை ஆட்சி செய்ய
கூடியவர் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறோம், ஆனால் அவர் இந்திய
திருநாட்டையே ஆளும் திறமை கொண்டவர் என தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, 25 ஆண்டுகாலம் நான் கட்சியை அவரிடம் கொடுத்தேன், மிக அருமையாக வழிநடத்தி
உள்ளார், இரவு 1 மணி ஆனாலும் டைரியில் குறித்து அதனை உடனடியாக
செயல்படுத்தக்கூடியவர் ஜிகே மணி என்றார்.
ஜி.கே மணிக்கு ஓய்வரியா உழைப்பாளி என்று பெயர் வைத்துள்ளோம்..ஜி கே மணியை பாராட்ட நான் தமிழில் வார்த்தைகள் தேடினேன், ஆனால் அவரை பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை என்றார்.