தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்! தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை…

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தியபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், துப்புரவு பணியாளர்கள் கொண்ட அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதகாவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply