முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

ராசிபுரம் அருகே 8 ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரியாகவுண்டம் பட்டியை சேர்ந்தவர் சுமையா. இவர் அந்த பகுதியில் உள்ல பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் தந்தை குடும்ப சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சுமையா தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் வலி தாங்க முடியாமல் கத்திய அவரது அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுமையா ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி, அவரை மேல்சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக நாமகிரிபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!

Halley karthi

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்

Jeba Arul Robinson

புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – அமைச்சர் விஜய பாஸ்கர்

Jeba Arul Robinson