இன்று முதல் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ள இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்..

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3…

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியானது வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இருநாட்டு வீரர்களும் கொரோனா தனிமைப்படுத்தலில் கடந்த சில வாரங்களாக இருந்தனர்.


இந்நிலையில், இருநாட்டு வீரர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லாததால் இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். சமீபத்தில்தான் ரஹானே தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி பலம்பொருந்திய ஆஸ்திரேலியாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இது, இந்திய அணி வீரர்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் ஒன்றாக அமைந்திருக்கும். முன்னதாக “இந்திய டெஸ்ட் தொடரை வெல்வது ஆஷிஸ் தொடரை வெல்வதை விட மதிப்பு மிக்கது” என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply