முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

NCL 2023 : திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரியை வீழ்த்தி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கால் இறுதிப் போட்டிக்கான தகுதிப்போட்டியில் திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி – தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி அணியை வீழ்த்தி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சார்பில் நடைபெற்று வரும் NCL T20 போட்டியின் மூன்றாவது நாள் போட்டி இன்று காலை A.வீரைய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்போட்டியில் திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி அணி மற்றும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அணிகள் மோதின, முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்லூரி அணியினர் களமிறங்கி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தனர். இதில் அந்த அணியைச் சார்ந்த அருண்பாண்டியன் 33 பந்துகளில்70 ரன்களும், அந்த அணியின் கேப்டன் ராபின் குமார் 56 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார், இருவரும் அதிரடியாக விளையாடி அணிக் வலுவை சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் என்ற கடின இலக்குடன் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அணியினர் களம் இறங்கினர்ஆனால் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்லூரி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தனர்.

இப்போட்டியில் 56 பந்துகளில் 80 ரன்கள் மற்றும் 3 ஓவர்கள் பந்து வீசி 8 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்த கே. எஸ் .ஆர் அணியின் கேப்டன் ராபின் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளாவில் ஓங்கி ஒலித்த வாரிசு குரல்: கேரளா FDFS கொண்டாட்டம்

Web Editor

மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்- சரத்குமார்!

Saravana

“எண்ணும் எழுத்தும் திட்டம்” 13ம் தேதி துவக்கம்

Arivazhagan Chinnasamy