பண்ணாரி அம்மன் கல்லூரியை அபாரமாக வீழ்த்தி, கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராமகிருஷ்ணா கல்லூரியில் சச்சின் 33 பந்துகளில் 45 ரன்களும், கேப்டன் சத்யா அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 42 ரன்களும் சேர்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பண்ணாரி பொறுத்தவரை கேப்டன் வேத் பிரகாஷ், சஞ்சய் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். எனவே பண்ணாரி அம்மன் கல்லூரி வெற்றி பெற 210 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி.
210 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வீழ்ந்தது.
15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 166 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் A பிரிவில் 6 புள்ளிகள் பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி
ஆட்ட நாயகன்:
ஆட்ட நாயகனாக ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் நவீன் பட்டா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆட்ட நாயகன் விருதை சங்கரா கல்லூரியின் துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் வழங்கினார். நவீன் பட்டா 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.