என்சிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், கே.எல்.என் பொறியியல் கல்லூரியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா கல்லூரி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் இணைந்து மாபெரும் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம், 32 அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்றும் நாளையும் காலிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், இன்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில், மதுரை சவுராஷ்டிரா கல்லூரி அணியும், மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கே.எல்.என் கல்லூரி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 18.4 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய சவுராஷ்டிரா கல்லூரி வீரர்கள் கார்த்திகேயன், பிரசாந்த், சிவ சுப்பிரமணியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள் : ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறுக..! – காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா கல்லூரி அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சவுராஷ்டிரா அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.