பொள்ளாச்சி PA கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில், கோவை இரத்தினம் கல்லூரி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மண்டலம், சரவணம்பட்டி சங்கரா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் பொள்ளாச்சி PA கல்லூரி மோதியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : ’இளைஞர்கள் புதுமையாக தொடங்கும் முயற்சிகளுக்கு பிரதமர் உதவுகிறார்’ – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இதில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இரத்தினம் கல்லூரி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ரஞ்சித் 38 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். PA கல்லூரி சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் ஆதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய PA கல்லூரி, தொடக்கத்திலேயே இரத்தினம் கல்லூரி அணியின் வேகப்பந்து வீச்சால் துவக்க ஆட்டக்காரர்களை இழந்தது. அந்த அணியில் பிரபாகரன் 27 பந்துகளில் 29 ரன்கள், ஆதி 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலையான ஆட்டமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 18.4 ஓவர்களில் PA கல்லூரி அணி 112 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம் கோவை இரத்தினம் கல்லூரி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது. ஆட்ட நாயகனாக இரத்தினம் கல்லூரி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ராம் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.