நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் பேருந்துகளில் தொங்கியப்படி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணுந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை,எளிய மக்கள் கல்வி பயில ஒரே வாய்ப்பாக இருக்கும் இப்பள்ளிக்கு மாணவ -மாணவிகள் சென்று வர முறையான பேருந்து வசதி இல்லை என்பது வேதனைக்குரிய விசயமாகும்.
இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதற்காக வேறு வழியின்றி பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் அவர்களின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். எனவே பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இவ்விவகாரத்தில் தலையீட்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
—வேந்தன்