நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு OTTயில் வெளியீடு?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு வீடியோ டாக்குமென்டரி வடிவில் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம், சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள Sheraton Grand ரிசார்ட்டில்…

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு வீடியோ டாக்குமென்டரி வடிவில் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம், சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள Sheraton Grand ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்வில் பங்கேற்பவர்கள் புகைப்படமோ, வீடியோவோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. Netflix ott தளம் இந்த திருமண நிகழ்வை பதிவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதே இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. நயன்தாரா திருமண நிகழ்வை டாக்குமெண்ட்ரி வடிவில் தயாரித்து Netflix தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இயக்குநர் கௌதம் மேனன் இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய நட்சத்திரங்களின் திருமண நிகழ்வு ஒளிபரப்பு உரிமை ott தளங்களுக்கு விற்கப்படுவது புது ட்ரெண்டாக மாறியுள்ளது.மேற்கு உலக நாடுகளில் நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்களையம், வீடியோக்களையும் பத்திரிகைகள், தனியார் டிவி சேனல்கள் உரிமம் பெற்று ஒளிபரப்புவது வழக்கமான ஒன்று. அதே பாணியை தற்போது இந்திய நட்சத்திரங்கள் கையில் எடுத்துள்ளனர்.

கத்ரீனா கைப், விக்கி கௌஷல் திருமண நிகழ்வு அமேசான் ott தளத்திற்கு அளிக்கப்பட்டிருந்தது. பெரிய கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற அவர்களின் திருமண நிகழ்வை 80 கோடி ருபாய்க்கு அமேசான் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன.

கத்ரீனா கைப் விக்கி கௌஷல் ஜோடியை தொடர்ந்து ஆலியா பட், ரன்பிர் கபூர் திருமண நிகழ்வின் உரிமும் பெயர் குறிப்பிடாத ott தளத்திற்கு வழங்கப்பட்டிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக அந்த நிறுவனம் 110 கோடி ருபாய் ஆலியா பட், ரன்பிர் கபூருக்கு வழங்கி உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நடைமுறையை தமிழுக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது நயன்தாரா விக்னேஷ் ஜோடி. திருமண நிகழ்வுகளை cd, dvdகளில் பார்த்த காலம் மாறி, தற்போது ottயில் பார்க்கும் காலம் வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.