அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் புனேயில் தொடங்கி யுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை நயன்தாரா. இப்போது, ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக, நடிக்கிறார்.
விஜய் நடிப்பில் பிகில் படத்தை இயக்கிய அட்லி, அடுத்து ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப் படுகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பூனேவில் தொடங்கியுள்ளது.
படத்தில் நயன்தாராவுடன் பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்துக்கு ஜவான் என்ற பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரியாமணியும் யோகிபாபுவும் ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இந்தி நடிகை சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.









