இந்தியா செய்திகள்

திரிபுரா முதல்வராக 2வது முறையாக பதவியேற்ற மாணிக் சாஹா!

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக 2வது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

திரிபுராவில் சட்டப் பேரவைத் தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மாணிக் சாஹா மீண்டும் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: அதிமுக நிர்வாகிகளுடன் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடிய இபிஎஸ்…

இதைத்தொடர்ந்து, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் பதவியேற்பு விழாநடைபெற்றது. விழாவில், அமைச்சர்களாக ரத்தன்லால் நாத், பிரஞ்சித் சிங்க ராய், டிங்கு, ராய், பிகாஸ் டெப்பர்மா, சுதாங்சு தாஸ், சுக்லா சரண் நோட்டியா ஆகியோருக்கும் முதல்வராக மாணிக் சாஹாவுக்கும் ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்- பிரதமர் மோடி

G SaravanaKumar

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

EZHILARASAN D

அதிமுக, பாமக சமூக நீதிக்கான கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

எல்.ரேணுகாதேவி