திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் எட்டாவது நாளான
இன்று காலை தங்க தேரோட்டம் நடைபெற்றது. தங்க தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலை வேளையில் தங்க தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து தங்க தேரில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு தீப தூப நைவேத்திய
சமர்ப்பணம் நடத்தப்பட்டது. அதன் பின் பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ஏழுமலையானின் தங்கத்தேரோட்டம் கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
இரவு பிரமோற்சவத்தின் நிறைவு வாகன புறப்பாடாக குதிரை வாகன புறப்பாடு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை காலை நடைபெற இருக்கும் சக்கர ஸ்நானம் நிகழ்ச்சியுடன் ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.







