கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள…

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில், புயல்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில் கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.