தேசிய பங்கு சந்தை; 3வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம்

தேசிய பங்கு சந்தை இன்று 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது. ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், இந்திய பங்கு சந்தையில், வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம்…

தேசிய பங்கு சந்தை இன்று 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது.

ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், இந்திய பங்கு சந்தையில், வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும் மும்பை பங்கு சந்தையில், 2.94 புள்ளிகள் அல்லது 0.0047 சதவீதம் என்ற அளவில் சற்று சரிவு ஏற்பட்டு 62,678.90 புள்ளிகளாக உள்ளது. ஆனால், தேசிய பங்கு சந்தை இன்று 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது.

இதன்படி, நிப்டி குறியீடு 11.90 புள்ளிகள் அல்லது 0.064 சதவீதம் உயர்ந்து, 18,629.95 புள்ளிகளாக லாப நோக்குடன் உள்ளது. வலுவான அந்நிய நேரடி முதலீடு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து நிலையாகவும், முன்னேற்றம் அடைந்தும் காணப்படுகிறது.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீட்டில் ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் உச்சம் அடைந்து காணப்படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.