முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபுவுக்கு காவலர் பயிற்சி அகாடமியின் டிஜிபியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிர்வாகப் பிரிவில் கூடுதல் டிஜிபியாக உள்ள சங்கர், சென்னையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காவல்துறை தலைமை அலுவலக கூடுதல் டிஜிபியாக உள்ள வெங்கடராமன், மறு உத்தரவு வரும் வரை நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்க்காவல் படையில் கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக தற்போது பணியாற்றி வரும் கூடுதல் டிஜிபி ஜெயராம், சென்னை ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு காவலர் பயிற்சி அகாடமியின் டிஜிபியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள சந்தீஷ், காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு, கோவை(வடக்கு) மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த பதவியில் இருந்து வரும், மதிவாணன் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பதவியை வகித்து வரும் அசோக்குமார் சென்னையில் சைபர் க்ரைம் பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் கடலோர காவல்படையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும்  எஸ்.செல்வக்குமார், தமிழ்நாடு கமாண்டோ படையின் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கமாண்டோ படையில் எஸ்.பியாக பணியாற்றி வரும் ஜி.ராமர், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு படையில் எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிர்வாகிகளை மாற்ற கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும்-சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

Web Editor

பெண் யானை உயிரிழப்பு!

இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்திருப்பார்கள்: திருமாவளவன்

EZHILARASAN D