தேசிய விளையாட்டு போட்டி; தமிழகத்திற்கு 2வது தங்க பதக்கம்

குஜராத்தில் நடைபெற்று வரும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் மும்முனை தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள்…

குஜராத்தில் நடைபெற்று வரும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் மும்முனை தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் நடைபெற்ற வருகின்றது. இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

ஆடவர் மும்முனை தாண்டுதலில் இறுதி சுற்றில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் கலந்து கொண்டார். கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய பிரவீன் இறுதியில் 16.68மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் பிரவீன் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாடு இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.