தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 3 இணை இயக்குநர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட 152 புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றுவதற்காக இந்த பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் என 152 DEO பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், அவைகளில் பணியாற்றும் வகையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணை இயக்குநர்கள் உமா, சசிகலா, அமுதவல்லி ஆகியோர் நிர்வாக
காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் செயலாளர் காகர்லா உஷா
தெரிவித்துள்ளார்.








