கூட்டணி குறித்து தேசிய தலைமை பதில் அளிக்கும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தேசிய தலைமை பேசும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தேசிய தலைமை பேசும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், எங்களுடைய முன்னாள் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா . ஜெயலலிதாவை ஆகியோரை அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

எனவே 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா மற்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்வதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கோவையில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, இது குறித்து தேசிய தலைமை பேசும் என அவர் பதில் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.