நாகையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் , கர்நாடகா, புதுச்சேரி, கேரளாவைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் இந்திய சோபுகை சைட்டோ ரிவ் கராத்தே பெடரேஷன் சார்பில் தேசிய ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடை பெற்றது. நாகூர் மார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்த போட்டியில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இருந்தும் சென்னை, கோவை, திருப்பூர் தஞ்சை, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இது சப் ஜூனியர், கேடட் , ஜூனியர், சீனியர் உள்ளிட்ட 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் 1800 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டி சென்றனர். இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் கேடயங்களும் வழங்கி பாராட்டு தெரிவிகப்பட்டது.
ம. ஸ்ரீ மரகதம்







