வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு – விசிக எம்பி ரவிக்குமார் எதிர்ப்பு..!

வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது மாநில உரிமைக்குள் தலையிடுதாகும் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20 சதவீத இளங்கலை இடங்கள் இனி ‘க்யூட்-ஐசிஏஆர்’அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என  அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்வுக்கு பண்ணிரண்டாம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம் என்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவிற்கு விசிக எம்.பி. ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் ஒன்றிய அரசின் அறிவிப்பு மாநில உரிமைக்குள் தலையிடுவதாகும். இதுவரை ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசின் கீழ் நடைபெறும் அட்மிஷனை நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தனது பிடிக்குள் கொண்டுவரப் பார்க்கும் மோடி அரசின் சதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.