தேசிய மருத்துவர்கள் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து….!

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இன்று (ஜூலை.01) தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர்களும் மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.

கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.

தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.