பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதையடுத்து, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘ஏக் தேரா, ஏக் மேரா’ அக்ஷய் குமார் காட்சியை மீண்டும் உருவாக்கி, நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடுவது போன்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடந்து வந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் நேற்று இந்தியா கைப்பற்றியது. இந்த போட்டியில் விராட் ஹோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். தொடரின் நாயகர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனை ஒன்றாக வென்றதற்காக இருவருக்கும் 2 லட்சத்து 50 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த பரிசுத்தொகையை எப்படி பிரித்துக் கொள்வது என்பதை, வேடிக்கையாக சித்தரிக்கும் விதமாக, போட்டி முடிந்த பிறகு உடை மாற்றும் அறைக்கு சென்று அங்கு இருவரும் சேர்ந்து பிரபல பாலிவுட் திரைப்படமான அக்ஷய் குமார் நடித்த ‘ஏக் தேரா, ஏக் மேரா’ வசனத்தை மையப்படுத்தி நகைச்சுவையாக வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் . அந்த வீடியோ பதிவில் பளு தூக்கும் இரும்பு உருண்டைகளை எடுத்துக்கொண்டு “ஒன்று எனக்கு இரண்டு உனக்கு மூன்று எனக்கு” என அஷ்வினுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுக்கும் ஜடேஜா “50 – 50, கணக்கு சரியாக இருக்கிறதா, குழப்பம் இல்லையே, மகிழ்ச்சியா” என்று கேட்பதுபோன்றும், அதற்கு அஷ்வின் குழந்தையைப் போல் மிகவும் மகிழ்ச்சியாக தலையசைத்து ரியாக்சன் காட்டுவது போன்றும் காட்சி பதிவு செய்யப்பட்டு வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதையடுத்து இறுதியில் இருவரும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து, ஆஸ்கர் விருது வென்ற பிரபல தெலுங்கு படமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு அண்ணன் தம்பிகளை போல் தோள் மீது கை போட்டு பரிசு தொகையுடன் நடனமாடுவது போல் அந்த வீடியோ முடிவடைகிறது.
When you’ve to split the Player of the Series prize money. 😂 pic.twitter.com/tz4PctT0aR
— Rajasthan Royals (@rajasthanroyals) March 13, 2023
2017-ஆம் ஆண்டு தொடங்கி 2022 வரை பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இதுவரை ஆஸ்திரேலியாவே வென்று வந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற முதல் அணியாக அதுவும் தனது சொந்த மண்ணிலேயே வெற்றியை பதிவு இந்தியா சாதனை படைத்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாவே அண்ணன் தம்பிகள் போன்று ஒன்று சேர்ந்து செயல்பட்டு, சுழல் பந்து வீச்சு துறையில் எதிரணிகளை தெறிக்க விட்டு வரும் அஷ்வின் – ஜடேஜா ஆகியோரின் இந்த வீடியோ பதிவு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Congratulations India for WCT Final and winning BGT 2023.
Ravi Ashwin & Ravindra Jadeja both Player of the series in BGT 2023.
Ash Anna 🤝 Jaddu be like. pic.twitter.com/BgycZVYgWt
— Ashutosh Srivastava 🇮🇳 (@sri_ashutosh08) March 13, 2023
இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சிரிக்கும் எமோஜிகளை போட்டுள்ளனர். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரியும் வேடிக்கையான இந்த வீடியோ குறித்து “கொடிய காம்போ” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் “லெஜெண்ட்ஸ் ஷேரிங் மேன் ஆஃப் தி சீரிஸ் பி லைக்” என்றும், “திரும்ப திரும்ப பார்த்த பிறகும் சிரிக்கிறேன்” என்றும் ஆளுக்கொரு கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா