தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் நாசர், நடிகை அபிராமி ஆகியோர் இணைந்ததை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைவதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. அதுவும் இந்த படத்தில் கமலின் மகனாக சிம்பு நடிக்கிறாராம்.
முழுக்க முழுக்க ஆக்ஷனை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் கமலஹாசன் கேங்ஸ்டராக நடிக்கிறார். மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு அண்மையில் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், தக் லைஃப் படத்தின் டப்பிங் வேலைகளை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். இதுக் குறித்த அட்டகாசமான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தக் லைஃப் படத்தில் நடிகர் நாசர், நடிகை அபிராமி ஆகியோர் இணைந்ததை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.







