முக்கியச் செய்திகள் இந்தியா

அகில் பாரதிய அகாரா பரிஷத் தலைவர் தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில் இந்து சமய மாடாதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பார்தியா அகாரா பரிஷித் (ஏபிஏபி) மடத்தின் தலைவர் நரேந்திர கிரி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேலும் தொடர்ந்து வருவதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பு: பிரதமர் வாழ்த்து

Halley karthi

ஸ்டம்பை உதைத்துத் தள்ளிய கிரிக்கெட் வீரருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டிற்கு வேண்டிய நீரை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்

Halley karthi