முக்கியச் செய்திகள் தமிழகம்

தீ விபத்து; ஊராட்சிமன்றத் துணைத் தலைவி உயிரிழப்பு

மேலூர் அருகே கோவில் கும்பாபிஷேக யாகசாலையில் இருந்து எடுத்த நாணயங்கள் மூலம் ஏற்பட்ட தீயால் ஊராட்சிமன்றத் துணைத் தலைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சாலைக்கிபட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

அந்த கும்பாபிஷேகத்திற்காக யாகம் நடத்திய யாக சாலையில் இருந்த காசுகளை எடுத்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதற்காக யாகசாலையில் சூடாக இருந்த 11 நாணயங்களை எடுத்து தனது கைப்பையில் வைத்து வீட்டிற்கு சென்றுள்ளார் மேலவளவு ஊராட்சி மன்ற துணைத் தலைவி சங்கீதா.

தனது இருசக்கர வாகனத்தில் நான்கு வழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பற்றி தீ அவர் மீதும் பரவியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் அவர் தனியாக வந்ததால் தீயை அணைக்க முயற்சித்தும் தீயை அணைக்க முடியாமல் போராடியுள்ளார். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர்.

60 சதவீத தீக்காயங்களுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சங்கீதா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“அதிமுகவில் சாதாரண தொண்டன் முதல் எம்எல்ஏ வரை யாரும் முதல்வராக வரமுடியும்”:முதல்வர் பழனிசாமி

Halley karthi

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் வெறும் 5 % குறைந்த பெண் பிரதிநிதித்துவம்!