நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அட்ச திருதிக்காக நகை வாங்க வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கம் உட்பட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அட்ச திருதிக்காக நகை வாங்க வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கம் உட்பட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தெற்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீ.டிரைவரான. இவர் நேற்று நள்ளிரவு பழனி கோவிலுக்கு சென்று விட்டு இன்று
மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை
கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில்
வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், ஒரு பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பாளையம் போலீசார் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அட்சய திரிதிக்காக வீட்டில் நகை செல்வம் சேர்க்க வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்து இருப்பது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.