தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட போரூர் முதன்மை காவலர் சஸ்பெண்ட் செய்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கோபி கண்ணன்(47). இவர்
சென்னை போரூர் காவல் நிலையத்தில் முதன்மை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசப்பட்ட வீடியோக்களை அதிக அளவில் பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ஆவடி காவல் ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோபி கண்ணனை ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று கோபி கண்ணனை சஸ்பெண்ட் செய்ய ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் குறித்து அவதூறான வீடியோக்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்த
காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காவை துறை மத்தியில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.







