குழந்தைகள் கைவிட்ட நிலையில் வறுமையினால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி..!

நாமக்கல் கொண்டிச்செட்டிபட்டியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி தள்ளாத வயதிலும் சொந்த தொழில் செய்ய முயன்று கொரோனாவில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம்…

நாமக்கல் கொண்டிச்செட்டிபட்டியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி தள்ளாத வயதிலும் சொந்த தொழில் செய்ய முயன்று கொரோனாவில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொண்டிச்செட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த தம்பதியினர் சிவா(61) மற்றும் ஞானசுந்தரி(58). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். தம்பதியினர் இருவரும் அப்பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வயதான தம்பதியினர் தங்கள் பிள்ளைகளிடம் பணம் வாங்க எண்ணாமல் சுயமாக தொழில் செய்ய நினைத்து கடந்த 2020ம் ஆண்டு நாமக்கல் பேருந்து நிலையம் அருகே துணிக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனோ ஊரடங்கினால் துணிக்கடை மூடப்பட்டாலும் மனம் தளராத தம்பதியினர் இரு சக்கர வாகனம் மூலமாக துணி வியாபாரம் செய்து வந்தனர். அதில் போதிய வருமானம் இல்லாததால் தம்பதியினர் அன்றாட செலவுகளுக்கே கஷ்டப்படும் அவல நிலை ஏற்பட்டது. மேலும் துணிக்கடை வைப்பதற்காக தெரிந்தவர்களிடம் வாங்கிய கடனும் நீண்ட நாட்களாக செலுத்த முடியாததால் தம்பதியினர் மன வருத்தமடைந்தனர்.

இத்தகைய சூழலில் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தள்ளாத வயதிலும் உழைத்து வாழ எண்ணியவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.