வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இரு இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இரு இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார். ஜவுளி கடை ஊழியரான இவர் வழக்கம் போல பணிக்கு சென்று
விட்டு தனது இருசக்கரவாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு  சென்றுள்ளார். இதையடுத்து காலையில் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது முன்பக்கம் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை காணவில்லைஎன்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை பார்த்த போது நள்ளிரவில் வந்த இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது
தெரிய வந்தது.இதையடுத்து மதன் குமார் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1000வீடுகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.