திண்டுக்கல்லில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி மற்றும்
முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில்
தச்சு தொழிலாளியின் மகள் நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மதிப்பெண் பெற்று தமிழ்நாடு அளவில் சாதனை படைத்தார். இதனை அடுத்து மாணவியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை அடுத்து கவிப்பேரரசு வைரமுத்து, மாணவியை நேரில் சந்தித்து அவரது
வீட்டிற்கே சென்று தங்கப் பேனாவை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில்
திண்டுக்கல் மாநகராட்சியின் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் நேரில் பள்ளிக்குச் சென்று மாணவியை சந்தித்து பொன்னாடை அணிவித்து பரிசளித்து பாராட்டு
தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனை அடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் பள்ளிக்கு நேரில் சென்று மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர் ஆசிரியர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.மேலும் மாணவியின் கல்விக்காக ஊக்கத் தொகையும் வழங்கினார். மேலும்
மாணவியை சந்தித்து பாராட்டு தெரிவிப்பதற்காக திண்டுக்கல் இலக்கிய களம் மற்றும் அறிவியல் இயக்கம் என பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்களும் பள்ளிக்கு
நேரில் சென்று மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
—–ரெ.வீரம்மாதேவி
பாராட்டு மழையில் நனைந்து வரும் சாதனை மாணவி நந்தினி!
திண்டுக்கல்லில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி மற்றும் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல்…






