யோகி பாபு வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறிய நகைச்சுவை கதாபாத்திரம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு. அதன் பின்னர் தனது நடிப்புத் திறமை, தனித்துவ தோற்றம், ஒவ்வொரு டயலாக்கிற்கும் உடனடியாக கவுன்டர் கொடுக்கும் அவரது இயல்பு ஆகியவற்றின் காரணமாக வெள்ளித் திரையிலும் வெற்றிகரமாக முத்திரை பதித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஹைதரபாத்திடம் பணிந்தது பஞ்சாப் – 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இவர் நடித்த சூது கவ்வும், டிமாண்டி காலனி என அடுத்தடுத்து பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது. ஆண்டவன் கட்டளை படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெர்சல், கோலமாவு கோகிலா என வரிசையாக திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தவிர்க்க முடியாத காமெடியனாக உருவெடுத்தார்.
https://twitter.com/iYogiBabu/status/1645263037509804033?t=FiMaMbnGPmz0bnsJChwY2A&s=08
சினிமாவை தாண்டி கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட யோகி பாபு, அநேக நேரங்களில் கிரிக்கெட் மட்டையுடனேயே வலம் வருகிறார். மேலும் அவர் அவ்வப்போது வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டும் வருகிறார்.
அந்த வகையில், யோகி பாபு வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பந்துகளை சிதறடிக்கும் யோகி பாபு, இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.







