ட்விட்டரில் 10.82 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டதன் மூலம், ட்விட்டரில் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட பெண் என்ற சிறப்பை பிரபல பாடகி ரியானா பெற்றுள்ளார்.
2003-ஆம் ஆண்டில் இசைத் தயாரிப்பாளர் இவான் ரோஜர்ஸ் மற்றும் கார்ல் ஸ்ட்ரூக்கன் ஆகியோர் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பிரபல பாப் பாடசியான ரியானா. தனது 15வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கினார். 2007-ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘குட் கேர்ள் கான் பேட்’ (Good Girl Gone Bad) ஆல்பம், உலகளவில் பிரபலமாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அம்ப்ரெல்லா (“Umbrella”) என்ற பாடலுக்காக ரியானா தனது முதல் கிராமி விருதைப் பெற்றார். பின்னர் அவர் வெளியிட்ட ரேட்டட்ஆர் (Rated R), லவுட் (Loud), டாக் தட் டாக் (Talk That Talk), அன்அபோலோஜெடிக் (Unapologetic) போன்ற ஆல்பங்கள் மாபெரும் வெற்றியைப் பெற, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ரியானா.
இதையும் படியுங்கள் : நான் அடிச்சா மாஸ்….. பந்தை பறக்கவிடும் யோகி பாபு – வீடியோ இணையத்தில் வைரல்
கிராமி விருதுகள், அமெரிக்க இசை விருதுகள், பில்போர்டு இசை விருதுகள், கின்னஸ் உலக சாதனைகள் என பல விருதுகளையும், சாதனைகளையும் அள்ளிக் குவித்த ரியானா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 14.8 கோடி பேரும், முகநூலில் 10.3 கோடி பேரும் ரியானாவை பின்தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் ட்விட்டரில் 10.82 கோடிக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர். இதன்மூலம் ட்விட்டரில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பெண் என்ற சிறப்பை ரியானா பெற்றுள்ளார்.







