முக்கியச் செய்திகள் தமிழகம்

மாப்பிள்ளை தோழனாக நானும் என் அண்ணன் அழகிரியும் இருந்தோம் – நெகிழ்ந்த மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சண்முகநாதன் திருமணத்திற்கு தானும் தன் அண்ணன் அழகிரியும் மாப்பிள்ளை தோழனாக இருந்தோம் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இல்ல திருமண நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1967ஆம் ஆண்டில் இருந்து கலைஞர் கருணாநிதி இறக்கும் வரை அவருடன் நெருங்கி பழகியவர் சண்முகநாதன் எனவும், மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு, இன்று தாம் பெருமை அடைந்துள்ளேன் என்றால், அதற்கு காரணமானவர்களுள் மறைந்த சண்முகநாதனும் ஒருவர் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1971 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் சண்முகநாதனுக்கு திருமணம் நடைபெற்றதாக நியாபகங்களை பகிர்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின், திருமணத்தின்போது, சண்முகநாதனுக்கு தானும் தன் அண்ணன் அழகிரியும் மாப்பிள்ளை தோழனாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார். கலைஞர் பேச்சுக்களை எழுதி தன்னிடம் அதில் ஏதாவதுபிழை உள்ளதா என சண்முகநாதன் சரிபார்க்க சொல்வதை தற்போது நினைத்து பார்ப்பதாக முதலமைச்சர் கூறினார்.

 

உடல் நலம் சரி இல்லாத போதும், தன்னுடைய பேச்சுக்களை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு தன்னை தொலைப்பேசியில் அழைத்து சண்முகநாதன் பாராட்டுவார் எனவும் அப்போது இதை பார்க்க கருணாநிதி உயிருடன் இல்லையே என தன்னிடம் அவர் வருத்தப்படுவார் எனவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். நான் இன்று இவ்வளவு புகழ் அடைந்துள்ளதற்கும் மற்றவர்கள் தன்னை பாராட்டும் அளவு தாம் பெருமை அடைந்துள்ளதற்கும் காரணமானவர்களுள் மறைந்த சண்முகநாதனும் ஒருவர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

முதல் படம் ரிலீசாகும் முன்பே மரணமடைந்த இயக்குநர்!

Ezhilarasan

மற்றுமொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை : மு.க.ஸ்டாலின்

Ezhilarasan

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!

Jeba Arul Robinson