இசையமைப்பாளர் டி.இமான் திருமணம்-ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.  தமிழ்திரையுலகில் முன்னணி இசையமைப்பளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த…

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். 

தமிழ்திரையுலகில் முன்னணி இசையமைப்பளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு விஸ்வாசம் திரைப்படத்திற்கு இசையமைத்ததிற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார்.

இவர் கடந்த 2008-ல் மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்துப் பெற்றதாக அறிவித்தார்.

இந்நிலையில் தமிழ்த்திரையுலகில் கலை இயக்குநராகப் பணியாற்றி மறைந்த உபால்டுவின் மகள் அமலியை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள மணமக்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.