ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!!

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூரில் வடமாநில தொழிலாளர்கள், ரோந்து சென்ற காவல்துறையினரை தாக்கியது சர்ச்சையான நிலையில், காவல்துறை அதிகாரிகளின் பணியிட மாற்றம்…

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் வடமாநில தொழிலாளர்கள், ரோந்து சென்ற காவல்துறையினரை தாக்கியது சர்ச்சையான நிலையில், காவல்துறை அதிகாரிகளின் பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பொள்ளாச்சி உதவி ஆணையராக இருந்த ஏஎஸ்பி பிருந்தா, எஸ்.பி.ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சேலம் மாநகர வடக்கு மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் துணை மண்டல உதவி கண்காணிப்பாளராக இருந்த ஏஎஸ்பி ஐமான் ஜமால்,  எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு,  ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சேலம் மாநகர வடக்கு மண்டலத்தின் துணை ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி கௌதம் கோயல்,  தாம்பரம் காவல் ஆணையரகத்தின், பள்ளிக்கரணை சட்டம் – ஒழுங்கு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் என். பாஸ்கரன்,  மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 6வது பெட்டாலியன் கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சுகுணா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.