முக்கியச் செய்திகள் தமிழகம்

தீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

தீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும் என புதிதாக பணியில் சேரும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா, சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துதுறைச் செயலாளர் பிரபாகரன், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், புதிதாக காவல்துறையில் சேர்ந்து பணியாற்றவுள்ள 86 பயிற்சி துணை கண்காணிப்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

தீயதை பொசுக்கும் தீயாகவும், அனைவருக்கும் பொதுவான வானமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றங்களுக்குத் தண்டனை பெற்று தரும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களே நிகழாமல் தடுக்கும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

பேனர் கிழிந்ததால் மண்டப உரிமையாளரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்

Saravana Kumar

ஜெயம் ரவி ஹீரோயினுக்கு கொரோனா பாதிப்பு!

Halley karthi

அமெரிக்காவில் அப்படி.. இந்தியாவில் இப்படி.. இணையத்தை ஆக்கிரமித்த புதிய மீம் கான்சப்ட்!

Saravana