முக்கியச் செய்திகள் இந்தியா

மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 27% இட ஒதுக்கீடு: நடப்பாண்டில் வழங்க மத்திய அரசு அறிவிப்பு

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021- 22ஆம் கல்வியாண்டில் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக் கான இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, நடப்பாண்டிலேயே எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ், பி.டி.எஸ், எம்.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது. இதன்மூலம், நாடு முழுவ தும் சுமார் 5 ஆயிரத்து 550 மாணவர்கள் பயன் அடைவார்கள் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நடப்பு கல்வியாண்டியே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு அமல்படுத்தப் படுவதால், நமது நாட்டில் சமூக நீதிக்கான புதிய முன்னுதாரணத்தை உருவாக்க முடியும் எனவும் பிரதமர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

Gayathri Venkatesan

அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!

Halley karthi

பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய காவலர் கைது!

Jeba Arul Robinson