அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகள் ரத்து – வங்காளதேச அரசு அறிவிப்பு..!

வங்காள தேசத்தில் தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள்  நியமிக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. இப்போரட்டத்தால் ஷேக் ஹசீனாவின் காட்சி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இந்நிலையில்  அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என முகமது யூனுஸ் நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதற்கு அந்நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நடவடிக்கையை “இஸ்லாமியத்திற்கு விரோதமானது என்றும் பொருத்தமற்றது என்றும் விமர்சித்தன. மேலும் இத்திட்டத்தை கைவிடாவிட்டால் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும்  அச்சுறுத்தினர்.

இதையடுத்து முகமது யூனுஸ் அரசானது தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள்  நியமிக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளது. இதனை அந்நாட்டு வங்கதேசத்தின் தொடக்க மற்றும் வெகுஜன கல்வி அதிகாரி மசூத் அக்தர் கான் உறுதிபடுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.