ஓமலூர் அருகே கல்குவாரியில் 24 வயது வாலிபர் மர்மமான முறையில் இறந்ததாக புகார் செய்ததை அடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி
கோவிந்தகவுண்டனூர் பகுதியில் தனியார் ஜல்லி கிரசர் இயங்கி வருகிறது. இந்த
கிரசரில் மணி என்பவரது மகன் பிரபாகரன் 24 என்பவர் மர்மமான முறையில் மயங்கி
கிடந்ததாக தெரிகிறது.
இது குறித்து தொடர்ந்து அங்கு உள்ள சக ஊழியர்கள் அவரை மீட்டு பண்ணப்பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு முதல் உதவி சிகிச்சை முடிந்த பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் டால்மியா போர்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இவர் இயற்கையாகவே இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இருந்தாரா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி தனியார் கிரசர் பகுதியில் ஊழியர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







