நகராட்சி விரிவாக்கம் மற்றும் பேரூராட்சி மாநகராட்சியுடன் இணைப்பு போன்ற சம்பவங்கள் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகே முடிவு செய்யப்படும் எனத் திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு செய்யும் வகையில் திருவள்ளூர் நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிக்கும் மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என்னவென்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். அடிப்படை வசதிகள் குறித்து விடுத்த கோரிக்கைகளைத் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அதற்கான நிதியைப் பெற்று உடனடியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ஒரே நாளில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
அதனையடுத்து செங்குன்றம் பேரூராட்சியைச் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ஊராட்சி நிர்வாகத்தின் பதவிக் காலம் முடியும் வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார். அதே போல் திருவள்ளூர் நகராட்சியை விரிவாக்கும் திட்டமும், காக்களூர் ஊராட்சியைப் பேரூராட்சியாகவோ நகராட்சியாகவோ மாற்றுவதற்கான பணிகளும் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நம்ம டாய்லெட் என்ற திட்டம் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டு அதனைத் தூய்மையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுத்தது போல் நகராட்சிப் பகுதிகளிலும் நம்ம டாய்லெட் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.