மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வியடைந்தார்.
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் எச்.எஸ். பிரனாய் கலந்து கொண்டார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கேற்ற பிரனாய் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங் காங் வீரர் கா லாங் அங்கஸ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-17 9-21 17-21 என்ற செட் கணக்கில் பிரனாய் தோல்வியை சந்தித்தார். இதனால் அவர் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.
நேற்று நடந்த அரையிறுதிக்கான போட்டியில் சுனேயாமாவுக்கு எதிராக கடுமையாக போராடி 25-23, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.