ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கவும், கிரவுண் சாலை அமைக்கவும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது அவசியம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆரோவில் அறக்கட்டளை சார்பாக பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறாததை எதிர்த்தும், கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதாகவும் சுற்ற்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மரங்களை வெட்டாமல், நீர்நிலைகளை பாதிக்காமல் சாலை அமைக்க முடியுமா என கூட்டுக்குழு ஆய்வு செய்யவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற பெறும்வரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சாலை அமைக்கும் பகுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வு செய்து, மரங்கள் வெட்டப்படுவதை குறைக்கும் வகையில் சாலையை எப்படி அமைக்கலாம் என அறிக்கை அளிக்க வேண்டும். இந்த ஆய்வு குழு அறிக்கை அளிக்கும் வரை எந்த மரங்களையும் வெட்டக் கூடாது. அவ்வாறு மரங்கள் வெட்டப்ட்டிருந்தால், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.