முக்கியச் செய்திகள் உலகம்

தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்!

தமிழ் மக்கள் உள்பட மியான்மர், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில், தெற்கு ஆசியாவில் உள்ள இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், நேற்று கன்னட, தெலுங்கு மக்கள் யுகாதி என்றும் மராத்தியர்கள் குடி பத்வா என்றும், பஞ்சாபில் சேட்டி சந்த் உள்ளிட்ட பெயர்களில் மக்கள் தங்கள் புத்தாண்டை கொண்டாடினர்.

இன்று தமிழ் புத்தாண்டு உள்பட, கேரளவில் விஷு, அசாமில் போஹாக் பியூ, ஒடிசாவில் மஹா பிஷுபா பனா சங்ராந்தி என்றும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர்.

தமிழ் புத்தாண்டிற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நேரந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தானும் தன் மனைவி ஜில்லும் சேர்ந்து தென் கிழக்கு மற்றும் தெற்காசியாவில், புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நேபாளம், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

உர விலை 58 சதவிகிதம் உயர்வு; திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Gayathri Venkatesan

இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்- கே.எஸ்.சரவணகுமார்!

Niruban Chakkaaravarthi

அமெரிக்கா, தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தொடர்ந்து வழங்கவேண்டும் : இந்தியா கோரிக்கை!

Ezhilarasan