முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

மனிதனைத் தாக்கும் கருப்புப் பூஞ்சை!

கருப்புப் பூஞ்சை என்றழைக்கப்படும் மியுகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்பத பூஞ்சைகளில் ஒரு வகையாகும். இது சாதாரணமாகவே நம் சுற்றுப்புறத்தில் காணப்படும் ஒன்று. தற்பொழுது இந்த மியுகோர்மைகோசிஸ் என்னும் கருப்புப் பூஞ்சை மனிதர்களில் பெரும்பாலும் தாக்கிவருகிறது.

இந்த கருப்பு பூஞ்சை தாக்கத்தால் மனிதர்களுடைய உடலில் சைனஸ், நுரையீரல், தோல் மற்றும் மூளையை பாதிக்கின்றது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கருப்புப் பூஞ்சையை சுவாசித்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது.


மேலும் காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் இரத்தவாந்தி இதன் அறிகுறிகளாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 2000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கருப்புப் பூஞ்சை பெரிதும் தாக்குகின்றது. அதனால் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களும் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு சரியான நிலையில் இருப்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் கொரோனா நோயாளிகளை கையாளும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பூஞ்சை எதிர்ப்பிகள் மற்றும் ஊக்க மருந்துகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதே இந்த கருப்புப் பூஞ்சை நோய்க்குத் தீர்வாகும். இதனையடுத்து கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சையைக் குறைந்தது நான்கு முதல் ஆறு வாரங்களுக்குச் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இந்த சிகிச்சைக்குப் பயன்படும் ஆம்போடெரிசின் பி (Amphotericin B) என்னும் மருந்து சில மாநிலங்களில் திடீரென தேவை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஆவடியில் போட்டியிட விரும்புகிறேன்: அமைச்சர் பாண்டியராஜன் விருப்பம்!

Jayapriya

உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி!

Jayapriya

ஆன்லைனில் வாகனங்கள் விற்பதில் மோசடி செய்தவர் கைது

Gayathri Venkatesan