மாட்டுச் சாணம் கொண்டு தயாரான பெயிண்ட் – ரூ.30,000 கூடுதல் வருமானம்

Cow Dung Paint: மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்ட்டை, காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை (ஜன.12), அறிமுகம் செய்கிறார். இதற்கு “காதி ப்ராக்ரிதிக்…

Cow dung paint

Cow Dung Paint: மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்ட்டை, காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை (ஜன.12), அறிமுகம் செய்கிறார். இதற்கு “காதி ப்ராக்ரிதிக் பெயிண்ட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெயிண்ட் தயாரிப்பில் மாட்டுச்சாணம் முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது.

இது சுற்றுச் சூழலுக்கு நன்மையளிக்கும், நச்சுத்தன்மையற்ற, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தயாரிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ‘காதி ப்ராக்ரிதிக்‘ பெயிண்ட்டின் தயாரிப்புச் செலவு மிகவும் குறைந்தது என்று இந்திய தர நிர்ணய பணியகம் சான்றிதழ் அளித்துள்ளது.

டிஸ்டெம்பர் பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக் எமல்ஷன் பெயிண்ட் என்று காதி ப்ராக்ரிதிக் பெயிண்ட் இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது.

விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம்

இந்த பெயிண்ட்டில் ஈயம், பாதரசம், குரோமியம், ஆர்சனிக், காட்மியம் போன்ற கன உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த திட்டம் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் நிலையான உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘காதி ப்ராக்ரிதிக்’ பெயிண்ட் சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வகையில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply